கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேர்தல் மேற்பார்வையாளர் ரேணு ஜெயபால் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.