ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். வழக்கமாக தர்ப்பணம் செய்து நொய்யல் ஆற்று நீரில் ஸ்நானம் செய்யும் மக்கள் இவ்வாண்டு நொய்யல் ஆறு வறண்டு காணப்படுவதால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி தலையை நனைத்து செல்கின்றனர்..