தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கோவை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல போளுவாம்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.