மேட்டுப்பாளையம் 10-ஆவது வார்டு பகுதியில் திறந்த நிலையில் பயனற்று இருந்த ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது.
இதையடுத்து, இந்த ஆழ்துளை இன்று மூடப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த வட்டாட்சியருக்கும் நகராட்சி ஆணையாளருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.