வடகோவை மேம்பாலம் அருகே அமைந்துள்ள மணி கோபுரத்தை கோயம்புத்தூர் சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு கட்டியது. இந்த மணி கோபுரத்தை அப்போதைய மாநகராட்சி ஆணையர் சந்திரமவுலி திறந்து வைத்தார்.இந்த சூழலில், கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் அமைப்பு இந்த மணி கோபுரத்தை தற்போது புதுப்பித்துள்ளது.