இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கோவையில் திறக்கப்பட்டுள்ளது.கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியில் ஆமினி புத்தக நூலகம் என்ற பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே வாசிப்புத்திறனை அதிகரிக்க செய்ய லாப நோக்கமில்லாமல் துவங்கப்பட்டுள்ள நூலகம் இந்தியாவிலேயே தனியாருக்கு சொந்தமான பெரிய நூலகமாகும். 5 ஆயிரத்து 500 சதுரடி பரப்பளவில் மூன்று மாடி கட்டிடமாக உள்ள இந்த நூலகத்தில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் உள்ளன.