கொரோனா 2-வது அலை நாட்டையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி,உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக. நோய் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் இளம் வயதினரும் அதிகம் தற்போது இந்த நோயால் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த 95 வயது முதியவர் கொரோனா தடையை தகர்த்து நோயில் இருந்து குணமடைந்து இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.