கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.1986ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.ஆலன் திலக் கராத்தே பள்ளியில் பயிற்சியாளராக உள்ளார். ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி என்ற கராத்தே பள்ளி மூலம் 34 ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு கராத்தே பயிற்றுவித்து வருகிறார்.