வருகிற 25ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான பூமி பூஜை அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. அதில், மத்திய உள்துறை இணை அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணை அமைச்சர் வி .கே.சிங் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.