வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார். கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் பிரசசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.