கோவையில் விருதுநகர் வட்டார இந்து நாடார் உறவின் முறையை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோவையில் இச்சமூகத்திற்கென விருதுநகர் வட்டார இந்து நாடார் உறவின் முறை சங்கம் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக தொண்டுகள் செய்து வருகிறது. இச்சங்கத்தின் 13 வது ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.