எலைட் சர்க்கிள் மாணவர் நல அமைப்பு கேட்வே எனும் பள்ளி மாணவ மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளை வருடந்தோறும் கோலாகலமாக நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு கோவையில் உள்ள அவினாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 81 ஆயிரம் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.